கோயம்புத்தூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

15th Jun 2020 01:58 PM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நொய்யல் ஆற்றில் நீர் திருட்டை தடுக்கவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நொய்யல் நதியை தூர்வாரும் பணிகள் அண்மையில் தமிழக அரசு 230 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மாநகர் மற்றும் புறநகர் உள்ள குறைகளை கூறுவார்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நொய்யல் ஆற்றில் நடத்தப்படும் நீர் திருட்டை தடுக்கவும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளரும் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி நீர்நிலைகளை பாதுகாக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றை பாதுகாக்கவும் அங்கு நடைபெறும் நீர் திருட்டை தடுக்கவும் கோவை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT