கோயம்புத்தூர்

தியாகி குமரன் மார்க்கெட்டில் 88 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

11th Jun 2020 11:08 AM

ADVERTISEMENT

கோவை ராஜவீதியில் தியாகி குமரன் மார்க்கெட் உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மார்க்கெட்டில் 450 காய்கறி, கனி, மளிகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த மார்க்கெட்டின் அருகே தென்வடல் வீதியில் சாலை மற்றும் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து காய்கறி, பழக்கடை உள்ளிட்ட 88 கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் ஆக்கிரமிப்புக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் தியாகி குமரன் மார்க்கெட்டுக்குச் செல்லும் வியாபாரிகள், மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் மாநகாராட்சி ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத்தின் உத்தரவின் பேரில், கோவை மத்திய மண்டல உதவி ஆய்வாளர் மகேஷ் கனகராஜ் தலைமையில்,வியாழக்கிழமை காலை தென்வடல் வீதிக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலமாக அங்கிருந்த 88 வீடுகளையும் இடித்து அகற்றினர்.

Tags : coimbatore market Thiyagi Kumaran Market கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT