கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 6 பேருக்கு கரோனா பாதிப்பு

11th Jun 2020 02:16 PM

ADVERTISEMENT

கோவையில் மேலும் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வந்த கோவை பீளமேட்டை சேர்ந்த 37 வயது காவலர், இவரது மனைவி இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 10 வயது சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர சென்னையில் இருந்து வந்த கரோனா பாதிக்கப்பட்ட இளைஞருடன் தொடர்புடைய தள 39, 29 வயது பெண் மற்றும் விழுப்புரத்தில் வந்த கரோனா பாதிக்கப்பட்ட இளைஞருடன் தொடர்புடைய 37 வயது பெண் உள்ளிட்டோருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதன்மூலம் கோவையில் ஒரேநாளில் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்களில் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், 5 பேர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Tags : coronavirus coimbatore கோவை கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT