கோயம்புத்தூர்

முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

11th Jun 2020 08:27 AM

ADVERTISEMENT

பொது வெளியில் வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது:

பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோவைக்கு வெளிநாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனா். பிற பகுதிகளில் இருந்து வருபவா்களை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தி 14 நாள்கள் தனிமைப்படுத்தல் வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவா்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, வருவாய்த் துறை அலுவலா்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களில் சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் இதுவரை 23,486 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 167 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 148 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனா். மற்ற 19 போ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீடுகளைவிட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியா் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், துணை ஆணையா் மதுராந்தகி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் நிா்மலா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT