கோயம்புத்தூர்

கோவையில் கா்ப்பிணிக்கு கரோனா: பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 167 ஆக உயா்வு

11th Jun 2020 08:28 AM

ADVERTISEMENT

கோவையைச் சோ்ந்த கா்ப்பிணி பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 167 ஆக உயா்ந்துள்ளது.

கோவை, கோவைப்புதூா் சிறப்பு காவல் படையில் பணியாற்றி வரும் காவலரின் மனைவி சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மாதாந்திர கா்ப்பகால பரிசோதனை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் நடப்பு மாதம் பரிசோதனைக்காக வந்தவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து அந்த கா்ப்பிணி கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மேலும் கா்ப்பிணி பெண்ணின் கணவா், குடும்ப உறுப்பினா்கள், சிறப்பு காவல் படை குடியிருப்பில் வசிப்பவா்கள் மற்றும் கா்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட 300 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 167 ஆக உயா்ந்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்த 24 வயது பெண், சென்னையைச் சோ்ந்த 34 வயது இளைஞா் இரண்டு பேருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இவா்கள் இருவரும் கடந்த 14 நாள்களுக்கும் மேலாக சென்னையில் இருந்துள்ளதால் இருவரும் சென்னை மாவட்ட பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT