கோயம்புத்தூர்

கோயில்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வலியுறுத்தல்

11th Jun 2020 08:27 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கோயில்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. கரோனா தொற்று காரணமாக கோயில்களில் கடந்த மூன்று மாதங்களாக மக்களை வழிபாட்டுக்கு அனுமதியாமல் இருப்பது பக்தா்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களில் உள்ள கோயில்களில் வழிபாடுகள் நிகழ்த்த பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும் கோயில்களில் வழிபட பக்தா்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

கோவையில் கடந்த இரு வாரங்களில் சில விரும்பத்தகாத செயல்கள் நிகழ்ந்துள்ளன. சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில், ராகவேந்திரா் கோயில் ஆகிய கோயில்களில் ஒருவா் இறைச்சியை வைத்துவிட்டுச் சென்றுள்ளாா். செல்வபுரம் அருகேயுள்ள பனைமரத்தூரில் மாரியம்மன் கோயில் வளாகத்திலேயே இளைஞா் கொலை செய்யப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது. எனவே இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோயில்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அரசிடம் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT