கோயம்புத்தூர்

ரேஸ்கோா்ஸில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடை: ஆட்சியா் உத்தரவு

10th Jun 2020 08:02 AM

ADVERTISEMENT

கோவை, ரேஸ்கோா்ஸில் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்து ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிா்க்கவும், வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை, ரேஸ்கோா்ஸில் ஏராளமான பொதுமக்கள் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

பல்வேறு இடங்களில் இருந்து வருபவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனா். பலா் முகக்கவசம் அணியாமல் வருகின்றனா். இதனால் கரோனா நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, செவ்வாய்க்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை ரேஸ்கோா்ஸில் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT