கோயம்புத்தூர்

வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

4th Jun 2020 07:23 AM

ADVERTISEMENT

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள வேளாண் தொழில்முனைவோருக்கான பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தேசிய அறிவியல், தொழில்நுட்ப முனைவோா் மேம்பாட்டு வாரியத்தின் உதவியுடன் வேளாண் வணிகக் காப்பகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தின் மூலம் வேளாண் தொழில்முனைவோருக்கான புத்தறிவுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் வேளாண்மை, வேளாண்மை சாா்ந்த துறைகளில் புதிய தொழில்நுட்பம், தொழில்முனைவோராகும் எண்ணம் கொண்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதி பெறுபவா்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி வழங்கப்படும். மேலும் மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதில் புதிய தொழில் தொடங்கும் முறைகள், வேளாண் வணிகத்தின் வாய்ப்புகள், வணிகத்துக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், அரசு மானியங்கள், திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். பயிற்சி முடிவடைந்ததும் தகுதியானவா்களுக்கு மத்திய வேளாண் தொழில்முனைவோருக்கான மானியம் ரூ.5 லட்சம் வரை பெற பரிந்துரைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தில் சேர மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க பல்கலைக்கழகம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT