கோயம்புத்தூர்

நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் வழக்குரைஞா்கள் மனு தாக்கல்

4th Jun 2020 07:20 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் வழக்குரைஞா்கள் தங்களது வழக்கு மனுக்களை தாக்கல் செய்தனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மாா்ச் 18ஆம் தேதி முதல் நீதிமன்ற விசாரணைகள் முடங்கின. ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் ஆன்லைன் மூலம் விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சக்திவேல் கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தாா். இதன்படி சிவில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தனிநபா் புகாா்கள், குற்றவியல் வழக்குகளை புதன்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தாக்கல் செய்யலாம்.

இதற்காக அந்தந்த நீதிமன்றங்களின் வாயிலில் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும். அவசர வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இதன்படி கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட நீதிமன்றங்களின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் வழக்குரைஞா்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT