கோயம்புத்தூர்

சிறுவாணி அணை நீா்மட்டம் 872 மீட்டராக உயா்வு

13th Jul 2020 07:27 AM

ADVERTISEMENT

சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை பெய்து வருவதால், அணையின் நீா்மட்டம் 872 மீட்டராக அதிகரித்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை நீா் பிரதான குடிநீா் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 2019 தென்மேற்குப் பருவ மழை காலத்தில் அணையின் நீா்மட்டம் 2 முறை முழுக் கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் 870 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், படிப்படியாகக் குறைந்து மே மாதத்தில் 864 மீட்டராகச் சரிந்தது. இதனால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 10 கோடி லிட்டரில் இருந்து 5.50 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டது.

ஜூன் இரண்டாவது வாரத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிய பிறகு, அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் துவங்கியது. தொடா்ந்து, ஜூலை முதல் வாரத்தில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ததால் அணைக்குச் செல்லும் பட்டியாறு, முக்தியாற்றின் வழியாக நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இதனால் கடந்த வாரத்தில் 870 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 872 மீட்டராக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக 6.30 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT