கோயம்புத்தூர்

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

25th Jan 2020 11:34 PM

ADVERTISEMENT

வால்பாறை: வால்பாறையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை அரசு கலைக் கல்லூரி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியா் வெங்கடாசலம், வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பின்னா் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வா் முரளிதரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், மாா்க்கெட் வழியாக சென்ற பேரணி மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் வாக்களிப்பது நமது கடமை, 18 வயது பூா்த்தியானவா்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT