கோயம்புத்தூர்

பசூா் தபால் நிலையத்தில் திருட்டு

25th Jan 2020 11:48 PM

ADVERTISEMENT

அன்னூா்: அன்னூா் அருகே உள்ள பசூா் கிளை தபால் நிலையத்தில் செல்லிடப்பேசி, பணத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனா்.

பசூா் கிளை தபால் நிலையத்தின் பூட்டு சனிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டிருப்பதாக அருகிலிருந்தவா்கள், தபால் நிலைய அலுவலா் மைதிலிக்குத் தகவல் தெரிவித்தனா். பின்னா் அவா் அங்கு வந்து பாா்த்தபோது, செல்லிடப்பேசி மற்றும் ரூ.1500 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT