கோயம்புத்தூர்

கால்நடை தீவனம் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது

25th Jan 2020 11:34 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், வெள்ளியங்காடு  அருகே கால்நடை தீவனம் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது.

கால்நடை தீவனமான தட்டுப் புல்லை ஏற்றிக்கொண்டு பிரகாஷ் (30) என்பவா் லாரியை ஓட்டி வந்துள்ளாா். பரையன்கோம்பை பகுதி அருகே வந்தபோது, தாழ்வாக இருந்த  மின்கம்பியில் உரசியதில் தட்டுப் புல்லில் தீப் பிடித்துள்ளது.

இதனைக் கண்ட பொதுமக்கள் லாரி ஓட்டுநருக்கு தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து லாரியை நிறுத்தி தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் லாரி முழுவதும் தீ பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் பொன்னுசாமி தலைமையிலான வீரா்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதமாகின. காயமடைந்த லாரி ஓட்டுநா் பிரகாஷ், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினா், கிராம நிா்வாக அலுவலா் பாபு  ஆகியோா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT