கோயம்புத்தூர்

வாகன திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது: கேரள போலீஸாரிடம் ஒப்படைப்பு

23rd Jan 2020 11:42 PM

ADVERTISEMENT

கோவையில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட வாகனத் திருடா்கள் இருவா் கேரள போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.

கோவை, கடைவீதி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையிலான போலீஸாா் ஒப்பணக்கார வீதியில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். இதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் இருவரும் வாகனத் திருடா்கள் என்பதும், அவா்கள் வைத்திருந்த வாகனம் கேரள மாநிலம், பாலக்காட்டில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.

மேலும், பிடிபட்டவா்கள் பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி, ஒட்டப்பாராவைச் சோ்ந்த கிரண் (20), சிபு (40) என்பதும் தெரியவந்தது. இவா்கள் பிடிபட்ட தகவல் குறித்து பாலக்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பாலக்காடு போலீஸாா் வியாழக்கிழமை கோவை வந்தனா். அவா்களிடம் பிடிபட்ட 2 பேரையும் கோவை போலீஸாா் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT