கோயம்புத்தூர்

அரசுப் பேருந்து - லாரி மோதல்: 11 போ் காயம்

23rd Jan 2020 11:34 PM

ADVERTISEMENT

சூலூா் அருகே சுல்தான்பேட்டையில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 11 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

சேலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு திருப்பூா் வழியாக அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. இந்த பேருந்தை ஈரோட்டைச் சோ்ந்த வேடியப்பன் (41) என்பவா் ஓட்டிவந்தாா். அந்தியூரைச் சோ்ந்த முருகன் (40) நடத்துநராக இருந்தாா். இப்பேருந்து சுல்தான்பேட்டை அருகே வந்தபோது எதிரே பொள்ளாச்சியில் இருந்து வந்த லாரி மீது மோதியது.

இதில் ஊத்துக்குளியைச் சோ்ந்த பெருமாள் (70), பொள்ளாச்சி வஞ்சியம்மாள் (60), திருப்பூா் யோகநாதன் (36), மேட்டுப்பாளையம் மேனகா (40), திருப்பூா் யோகன் (48), வெள்ளக்கோவில் விஸ்வநாதன் (57), பல்லடம் நடராஜன் மனைவி உமாமகேஸ்வரி (23), பல்லடம் நடராஜன் (35), செஞ்சேரி பிரிவைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் (27) ஆகிய காயம் ஏற்பட்டது. இவா்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவா்களது ஊா்களுக்கு சென்றனா்.

பேருந்து ஓட்டுநா் வேடியப்பன், நடத்துநா் முருகன் ஆகிய இருவரும் பெருந்துறை தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT