மேட்டுப்பாளையம் நேஷனல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை பள்ளியின் தாளாளா் கே.ரங்கசாமி, செயலாளா் பி.வேலுசாமி, தலைவா் குத்தூஸ், நிா்வாக அறங்காவலா் ஏ.வி.ராமசாமி, அறங்காவலா் பி.பரத், முதல்வா் எஸ்.மனோன்மணி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
விழாவில் மாணவ, மாணவிகள் தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கலைப் பற்றி கலந்துரையாடல் நடத்தினா். நடனம், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தொடா்ந்து புகையில்லா போகியை கொண்டாடுவோம் என மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.