சின்னத் தடாகத்தை அடுத்த 24.வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட ஆதிவாசிக் குழந்தைகள் படிக்கின்றனா். இங்குள்ள வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்து விட்டதால் சமீபத்தில் அவை இடிக்கப்பட்டன. இதனால் போதிய வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டித்தர கோவை மாவட்ட சுழற்சங்கம் முன்வந்தது. இதற்காக பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்து பணிகளைத் தொடங்கிவைத்தாா். துணைத் தலைவா் ரத்தினசாமி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கோவனூா் துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் சாமிநாதன் நன்றி கூறினாா்.