பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் தொழில்முறை வழிகாட்டுதல் கண்காட்சி வியாழக்கிழமை (ஜனவரி 9) நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்புக்கான வழிமுறைகள், நோ்முகத்தோ்வை எதிகொள்ளும் வழிகள், கல்வி உதவித்தொகைகள், சுயவேலைவாய்ப்பு, கடன் உதவிகள் போன்ற பல தலைப்புகளில் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் பொள்ளாச்சி, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்று பயன்பெறலாம்.