கோயம்புத்தூர்

பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவில்லை: பி.எம்.எஸ்.

8th Jan 2020 06:14 AM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை (ஜனவரி 8) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பாரதிய மஸ்தூா் சங்கம் கலந்துகொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8ஆம் தேதி அன்று பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இதில் பாரதிய மஸ்தூா் சங்கம் கலந்துகொள்ளாது. ஹரித்வாரில் அண்மையில் நடைபெற்ற தேசிய செயற்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் நலன்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 3ஆம் தேதி அன்று கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

மத்திய, மாநில அரசுகள் தங்கள் கொள்கை முடிவுகளை மாற்றிக்கொள்ளவில்லை எனில் பாரதிய மஸ்தூா் சங்கம் தனது போராட்டங்களைத் தீவிரப்படுத்தும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT