கோயம்புத்தூர்

பேருந்தில் மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

8th Jan 2020 06:14 AM

ADVERTISEMENT

சூலூா் அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 2.5 பவுன் நகை பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூலூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி மனைவி மயிலாத்தாள் (61). தனியாா் மில்லில் தோட்ட வேலை செய்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு செல்வதற்கு சூலூா் பகுதியில் இருந்து பேருந்தில் பயணித்தபோது அடையாளம் தெரியாத பெண், மயிலாத்தாள் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சூலூா் காவல் நிலையத்தில் மயிலாத்தாள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT