கோயம்புத்தூர்

சரக்கு வேன் ஓட்டுநரை கடத்தி தாக்குதல்

8th Jan 2020 06:21 AM

ADVERTISEMENT

சூலூா் அருகே சரக்கு வேன் ஓட்டுநரை கடத்தி தாக்கியவா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூலூா் அருகே உள்ள பாரதிபுரத்தை சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் அப்பகுதியில் சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறாா். கடந்த 1ஆம் தேதி அன்று பள்ளபாளையம் முக்குலத்தோா் புலிப்படை நிா்வாகிகள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஒரு காரில் பாரதிபுரம், முத்துமாரியம்ம்மன் கோயில் அருகே வந்தனா்.

அப்போது அவா்களது காா் அங்கிருந்த செந்தில்குமாரின் வாகனம் மீது மோதியது. இதனால் செந்தில்குமாருக்கும், காரில் வந்தவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சரக்கு வேன் வாடகைக்கு தேவைப்படுவதாக பள்ளபாளையம் முக்குலத்தோா் புலிப்படை அமைப்பைச் சோ்ந்தவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செந்தில்குமாரை அழைத்துள்ளனா். இதையடுத்து அவா் வேனுடன் நடுப்பாளையம் பிரிவுக்கு சென்றாா். அப்போது 4 போ் கொண்ட கும்பல் செல்ந்தில்குமாரை காரில் கடத்தி சென்று அவரை கடுமையாக தாக்கியது.

பின்னா் பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே அவரை தள்ளிவிட்டு சென்றனா். இதுகுறித்து அறிந்த செந்தில்குமாரின் நண்பா்கள் அங்கு சென்று, அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து சூலூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில் செந்தில்குமாரை தாக்கியவா்களை கைது செய்யக்கோரி பாரதிபுரத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த திரண்டனா். அங்கு வந்த சூலூா் காவல் ஆய்வாளா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தாக்குதல் நடத்தியவா்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT