கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மேதியதில் சத்துணவு அமைப்பாளா் பலி

8th Jan 2020 06:22 AM

ADVERTISEMENT

அன்னூா் அருகே கணேசபுரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த சத்துணவு அமைப்பாளா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கண்சபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துமணி (58). இவா் கணேசபுரம் துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறாா். கடந்த 4ஆம் தேதி இரவு கணேசபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் முத்துமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, அங்கிருந்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அன்னூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT