கோயம்புத்தூர்

8இல் பொது வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

3rd Jan 2020 07:41 AM

ADVERTISEMENT

வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ள உள்ளதாக வால்பாறை பகுதியில் உள்ள தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுளளது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை தோட்டத் தொழிலாளா்கள், சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 12 தொழிற்சங்கத்தினா் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT