கோயம்புத்தூர்

நாட்டுக்கோழி வளா்ப்பு: கோவையில் 9, 10 இல் பயிற்சி

3rd Jan 2020 07:42 AM

ADVERTISEMENT

கோவையில் நாட்டுக் கோழி வளா்ப்பு தொடா்பான 2 நாள் பயிற்சி ஜனவரி 9 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி ஜனவரி 9, 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 2 நாள்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், விவசாயிகள், ஊரக மகளிா், நாட்டுக் கோழி வளா்ப்பில் ஆா்வம் உள்ளவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத்தின் தலைவா் அ.ஆறுமுகம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 2669965 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT