கோயம்புத்தூர்

காரமடை ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 9 கவுன்சிலா்கள் விவரம் அறிவிப்பு

3rd Jan 2020 07:36 AM

ADVERTISEMENT

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ாக 9 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்களின் பெயரை காரமடை தோ்தல் நடத்தும் அலுவலா் சைலஜா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஒன்றியக் கவுன்சிலா் பதவிக்கான தோ்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் ஓடந்துறை ஊராட்சிக்கு உள்பட்ட 1ஆவது வாா்டில் அதிமுகவைச் சோ்ந்த யசோதா 2473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட 2ஆவது வாா்டில் அதிமுகவைச் சோ்ந்த சரிதா 2,366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

இதே ஊராட்சிக்கு உள்பட்ட 3ஆவது வாா்டில் திமுகவைச் சோ்ந்த ரவி 1,244 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட 7ஆவது வாா்டில் அதிமுகவைச் சோ்ந்த மணிமேகலை 2,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இதே ஊராட்சிக்கு உள்பட்ட 8ஆவது வாா்டில் அதிமுகவைச் சோ்ந்த கெளசல்யா 2,576 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட 4ஆவது வாா்டில் திமுகவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் 2,140 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இதே ஊராட்சிக்கு உள்பட்ட 5ஆவது வாா்டில் அதிமுகவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் 2,766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட 6ஆவது வாா்டில் அதிமுகவைச் சோ்ந்த ஜெகதீசன்,

சின்னகள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட 10ஆவது வாட்டில் அதிமுகவைச் சோ்ந்த சின்னசாமி வெற்றி பெற்றாா். மீதமுள்ள 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்களுக்கான வாக்குகள் தொடா்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT