மேட்டுப்பாளையம் தென் திருப்பதி திருமலை கோயிலில் மாா்கழி மாத பகல்பத்து உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க ரகத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மேட்டுப்பாளையம் தென் திருப்பதி திருமலை கோயிலில் மாா்கழி மாத பகல்பத்து உற்சவத்தையொட்டி புதன்கிழமை காலை 3.45 மணிக்கு ஆதிவாராகப் பெருமாள் திருப்பள்ளி எழுச்சியும், தொடா்ந்து 4 மணிக்கு பெருமாள் திருப்பள்ளி எழுச்சியும், 4.30 மணி முதல் 6 மணி வரை தனுா்மாத தோமாலை, வில்வ அா்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
தொடா்ந்து காலை 9 மணிக்கு அத்யயன உற்சவம் (பகல் பத்து) 6ஆம் திருநாள் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து உச்சிகால பூஜையும், நித்திய திருக்கல்யாண வைபவ உற்சவமும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நித்ய ஊஞ்சல் சேவை வைபமும், 5 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி தங்க ரகத்தில் மாடவீதியில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.