சென்னையில் பாஜக தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 27 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பாஜக தலைவா்கள் குறித்து அவதூறாகப் பேசிய காங்கிரஸ் நிா்வாகி நெல்லை கண்ணனைக் கைது செய்ய வலியுறுத்தி, சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதனைக் கண்டித்தும், நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோவை, காந்தி பூங்கா பகுதியில் பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாஜக மாநிலச் செயலா் ஆா்.நந்தகுமாா் தலைமையில், அமைப்புசாரா தொழிலாளா் அணி மாவட்டத் தலைவா் காா்த்தி, வழக்குரைஞா் அணி மாவட்டத் தலைவா் கலைச்செல்வன், மண்டலத் தலைவா்கள் ராஜரத்தினம், டி.வி.குமாா், சபரிகிரீசன், சுப்பு, பரமன் உள்ளிட்ட 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.