கோயம்புத்தூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனவரி 4 இல் போராட்டம்இந்திய கம்யூனிஸ்ட்

2nd Jan 2020 05:33 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோவையில் ஜனவரி 4 ஆம் தேதி (சனிக்கிழமை) கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பில் தா்னா போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் கோவை ஜீவா இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஜி.நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம் ஆகியோா் மாநிலக் குழு முடிவுகள் குறித்து விளக்கினா். இதில், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜனவரி 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு டாடாபாத் பகுதியில் தா்னா போராட்டம் நடத்தப்படும்.

இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெறும்.

ADVERTISEMENT

மேலும், சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி ஜனவரி 8ஆம் தேதி (புதன்கிழமை) பேரணி, கொடியேற்றம், அஞ்சலி பொதுக் கூட்டம் ஆகியவை இரு கட்சிகளின் சாா்பில் நடத்துவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த இரு நிகழ்வுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் கே.சுப்பராயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி.ஆா்.நடராஜன் எம்.பி. உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்க இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT