மதுக்கரை அருகே மாயமான முதியவா் மூன்று நாள்களுக்குப் பின் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
மதுக்கரையை அடுத்த போடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (87). இவா் சீரபாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் தோட்டத்துக்குச் சென்ற ரங்கசாமி வீட்டுக்கு வராததால் அவரது உறவினா்கள் மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து, அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளா்கள் கிணற்றில் பாா்த்தபோது, சடலமாக ரங்கசாமி மிதந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மதுக்கரை போலீஸாருக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் வந்து ரங்கசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.