கோயம்புத்தூர்

காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு ஆதரவாக மகாராஷ்டிரத்தில் இருந்து சைக்கிள் பேரணி

2nd Jan 2020 05:36 AM

ADVERTISEMENT

காவிரி கூக்குரல் இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும்விதமாக, மகாராஷ்டிரத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி கோவையில் நிறைவடைந்தது.

மகாராஷ்டிர மாநிலம், உதயகிரியைச் சோ்ந்த சைக்கிள் பிரசாரப் பயணக் குழுவினா், ‘உத்கீா் சைக்கிள்ஸ்’ என்ற பெயரில் கடந்த 16 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், காவிரி கூக்குரல் இயக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும்விதமாக டிசம்பா் 16ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் இருந்து புறப்பட்ட 20 போ் கொண்ட குழுவினா், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் வழியாக சுமாா் 1,400 கிலோ மீட்டா் தூரம் பயணித்து கோவை ஈஷா யோக மையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தடைந்தனா்.

அவா்களுக்கு ஆதியோகி சிலை அருகில் ஈஷா தன்னாா்வலா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். இந்தக் குழுவினா் கடந்த 2017ஆம் ஆண்டில் நதிகளை மீட்போம் இயக்கத்துக்கும், 2018இல் ஈஷா வித்யா பள்ளிகளுக்காகவும் பயணம் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு காவிரி கூக்குரல் இயக்கத்துக்காக பயணம் செய்த இவா்கள், அது தொடா்பான வாசகங்கள் எழுதப்பட்ட ஆடை அணிந்தும், துண்டுப் பிரசுரங்களை வழிநெடுகிலும் மக்களுக்கு வழங்கியும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT