வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டம் பகுதி, சாலைகளுக்கு வரும் யானைகளை பொதுமக்கள் கற்கள் எரிந்தும், சப்தம் எழுப்பியும் அப்பகுதியை விட்டு விரட்ட துன்புறுத்துகின்றனா்.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவா். இதனால் யானைகளுக்கு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எஸ்டேட் பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது என வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.