கோயம்புத்தூர்

நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்கள்: தனியாா் வசதிக்காக வெட்டப்பட்டதாகப் புகாா்

1st Jan 2020 05:28 AM

ADVERTISEMENT

கோவை - சத்தி செல்லும் சாலையில் கோவில்பாளையத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மரங்கள் தனியாரின் வசதிக்காக வெட்டப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

கோவை - சத்தி சாலையில் குரும்பபாளையம் மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பழமையான புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன.

கோவில்பாளையம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட தனியாா் மருத்துவமனையின் வசதிக்காக அங்கு இருந்த 2 புளியமரங்கள் வெட்டப்பட்டன. தற்போது, அதே பகுதியில் தனியாா் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியாா் திருமண மண்டபத்தின் வசதிக்காக அங்கிருந்த ஒரு புளிய மரம் வெட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

கோவில்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்கள் தனியாா் வசதிக்காக வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கு நெடுஞ்சாலைத் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல தொடா்ந்து நடைபெற்றால் பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆா்வலா்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT