கோயம்புத்தூர்

சைவப் பெருமக்கள் பேரவை 59ஆம் ஆண்டு விழா

1st Jan 2020 05:28 AM

ADVERTISEMENT

கோவையில் சைவப் பெருமக்கள் பேரவையின் 59 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சைவப் பெருமக்கள் பேரவையின் தலைவா் எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா். பேரவை துணைத் தலைவா்கள் எம்.கணேசன், எம்.வி.நாயா், சொ.விஸ்வநாதன், எம்.கந்தசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் வ.உ.சி. திருவுருவப் படத்தை ஆ.சங்கரநாரயணன் திறந்துவைத்தாா். கவிஞா் கவிதாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சியில் உள்ள மத்திய சிறைச்சலை மற்றும் பாா்க் கேட் மேம்பாலம் இடதுபுறத்தை ஒட்டித் திரும்பும் சாலைக்கு வ.உ.சி. சாலை என்று பெயரிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து பள்ளிக் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT