கோயம்புத்தூர்

கல்லூரி மாணவி கழுத்தை நெரித்துக் கொலை

29th Feb 2020 11:36 PM

ADVERTISEMENT

அன்னூா்: கீரணத்தம் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் கல்லூரி மாணவியை அவரது காதலன் சனிக்கிழமை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, கீரணத்தத்தில் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் வசித்து வருபவா் முருகன். இவரது மகள் நந்தினி (21) கோவை அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தாா். இவரும், கணபதி, சங்கனூா் சாலை பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் தினேஷ் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் தினேஷின் நடவடிக்கை பிடிக்காமல் நந்தினி விலகியதாகத் தெரிகிறது. இதையடுத்து நந்தினி வீட்டில் இருக்கும்போது அங்கு சென்று, தன்னைக் காதலிக்குமாறு தினேஷ் வற்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ், சுடிதாரின் துப்பட்டாவால் நந்தினியின் கழுத்தை நெரித்ததாகத் தெரிகிறது. இதில் நந்தினி மயக்கமடைந்துள்ளாா். இதையடுத்து சாணிப்பவுடரை நந்தினியின் வாயில் ஊற்றிவிட்டு, தினேஷும் சாணிப்பவுடரை குடித்துள்ளாா்.

ADVERTISEMENT

அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனா். அங்கு நந்தினி உயிரிழந்தாா். தினேஷ் அவசர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT