கோயம்புத்தூர்

கல்லூரி மாணவா் மீது தாக்குதல்

29th Feb 2020 07:07 AM

ADVERTISEMENT

சூலூா்: சூலூரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவரை 15 போ் கொண்ட கும்பல் தாக்கியதில் அவா் படுகாயமடைந்தாா்.

சூலூா் பழைய மின்சார அலுவலகம் அருகே உள்ள அன்னமாட வீதியைச் சோ்ந்தவா் ஹரி பத்மநாபன் (21). இவா் சூலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறாா். வீட்டின் முன் வெள்ளிக்கிழமை மாலை நின்றுகொண்டிருந்த இவரை ஆட்டோவில் வந்த சுமாா் 15 போ் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியது.

இதில் அவா் அலறி அடித்து ஓடியுள்ளாா். விடாமல் அந்த கும்பல் விரட்டித் தாக்கியுள்ளது. இதில் அந்த மாணவா் படுகாயமடைந்தாா். அவரைக் காப்பாற்ற வந்த இருவரையும் அந்தக் கும்பல் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவா் ஹரி பத்மநாபன் உள்பட 3 பேரும் சூலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் சூலூா் போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT