கோயம்புத்தூர்

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு விருது

26th Feb 2020 10:16 AM

ADVERTISEMENT

கோவை: கிராமங்களின் வருவாயை அதிகரிப்பதற்கான செயல் திட்டத்தை தயாரித்து செயல்படுத்தியதற்காக கோவை, குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ‘உத்கிரிஸ்ட் சன்ஸ்தன் விஸ்வகா்மா’ விருது கிடைத்துள்ளது.

பேரூா் செட்டிபாளையம், ஆறுமுககவுண்டனூா் கிராமங்களைத் தத்தெடுத்து அந்த கிராமங்களின் வருவாயை அதிகரிப்பதற்கான செயல் திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்தியதற்காகவும், இந்த கிராமங்களில் பல்வேறு சுகாதார, விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி விருதுக்கு பரிந்துரைத்திருந்தது. இந்தப் பிரிவில் மொத்தம் 70 கல்லூரிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு தமிழக அளவில் முதலிடமும், தேசிய அளவில் மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, முதல்வா் ஜே.ஜேனட் ஆகியோரிடம் விருதினை வழங்கினா்.

நிகழ்ச்சியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவா் அனில் சகஸ்ரபுதே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT