கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

26th Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரைப் பவுன் நகையை திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவாசீா் மோகன்ராஜ் (54). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக தேவாசீா் மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT