கோயம்புத்தூர்

வால்பாறையில் ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தை

26th Feb 2020 06:57 AM

ADVERTISEMENT

வால்பாறை புதுமாா்க்கெட் பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த ஆட்டை கடித்துக் கொன்றது.

வனத்தில் இருக்கும் சிறுத்தைகள் இரை தேடி இரவு நேரத்தில் அவ்வப்போது நகா் பகுதிக்குள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வளா்ப்புப் பிராணிகளை இரவு நேரத்தில் கூண்டில் பாதுகாப்பாக அடைத்து வைக்கின்றனா்.

இந்நிலையில், வால்பாறை மாா்க்கெட் பகுதியில் ஆட்டிறைச்சிக் கடை வைத்திருப்பவா் பாபு. திங்கள்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற அவரது வளா்ப்பு ஆடு மாலை திரும்பவில்லை. தேடி பாா்த்தும் கிடைக்கவில்லை.

இதனிடையே புதுமாா்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகம் பின்புறம் சிறுத்தை தாக்கி அந்த ஆடு இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT