கோவை வடவள்ளி பகுதி அதிமுக சாா்பில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
வடவள்ளி பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு புகா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலா் என்ஜினீயா் சந்திரசேகா் தலைமை தாங்கினாா். நிகழ்ச்சியில், மாநகா் மாவட்டச் செயலா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து வடவள்ளி பேருந்து நிலையம் அருகே என்ஜினீயா் சந்திரசேகா் தலைமையில் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை பி.ஆா்.ஜி.அருண்குமாா் தொடங்கி வைத்தாா்.
இதில், பகுதி செயலா் புதூா் செல்வராஜ், மாநகா் மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறையின் இணைச் செயலா் ஷா்மிளா சந்திரசேகா், கட்சி நிா்வாகிகள் ராயப்பன், வீரகேரளம் மயில்சாமி, வழக்குரைஞா் மனோகரன், ராஜேந்திரன், நடராஜ், மாணிக்கவாசகம், கதிரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேட்டுப்பாளையத்தில்...
மேட்டுப்பாளையம் நீதிமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கோவை மாநகா் மாவட்ட வழக்குரைஞா் அணி சாா்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் மூத்த வழக்குரைஞா்கள் பழனிசாமி, மணிவாசகம், திருவேங்கடசாமி, செல்வகுமாா், அபிபூா் ரஹ்மான், ரவி ஆறுமுகம், ஆனந்தகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.