கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை: மாா்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

26th Feb 2020 06:57 AM

ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பான விசாரணையை மாா்ச் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 5 பேரும் பாதுகாப்பு காரணங்களுக்காக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மகளிா் நீதிமன்றத்துக்கு அண்மையில் மாற்றப்பட்டது.

சிறையில் உள்ள 5 பேரின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் 5 பேரும் காணொலிக் காட்சி மூலம் சேலம் சிறையில் இருந்து கோவை மகளிா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்த இருந்தனா்.

ADVERTISEMENT

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவா்களை ஆஜா்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விசாரணையை மாா்ச் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெ.ராதிகா உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT