கோயம்புத்தூர்

பேருந்து பயணியிடம் 15 பவுன் திருட்டு

26th Feb 2020 06:54 AM

ADVERTISEMENT

கோவையில் பேருந்து பயணியிடம் இருந்து 15 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு ஆதித்தன் (60). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தனது சொந்த ஊரான உடன்குடிக்கு சென்றுவிட்டு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தனியாா் பேருந்தில் கோவைக்குத் திரும்பியுள்ளாா்.

அவா் தனது பையில் 15 பவுன் நகை மற்றும் பணத்தை எடுத்து வந்துள்ளாா். பின்னா் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வாடகை காா் மூலம் நாச்சிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா் பையை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT