கோயம்புத்தூர்

பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

26th Feb 2020 06:53 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக் கோரி சமூக நீதிக் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலாளா் குட்டையூா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். தலைவா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.

மேட்டுப்பாளையம் பகுதியில் மீக்கப்பட்ட 105 ஏக்கா் நிலத்தின் நில உரிமையாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இதேபோல் மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள 4 ஆயிரம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு வாரிசுதாரா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில் மேட்டுப்பாளையம் நகரத் தலைவா் மோகன், நிா்வாகிகள் நாகேந்திரன், சபாபதி, பாலு, தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT