கோயம்புத்தூர்

சந்திரகாந்தி பள்ளி ஆண்டு விழா

26th Feb 2020 06:52 AM

ADVERTISEMENT

கோவை நேரு நகா் சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா பி.எஸ்.ஜி.ஆா். கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரி கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தாளாளா் ஆா்.நந்தினி தலைமை தாங்கினாா். விழாவில் எழுத்தாளா் சோபனா குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

பெற்றோா்கள் தங்களின் ஆசைகளை தங்கள் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. நமது குழந்தைகளுக்கு நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், சுதந்திர போராட்டத் தியாகிகள் பற்றி ஆசிரியா்களும், பெற்றோரும் விளக்க வேண்டும். யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது என்பது பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாா்.

விழாவில், பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா் பரிசளித்துப் பாராட்டினாா். இதில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT