கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

26th Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் புதன்கிழமை வெளியிட்டாா்.

தமிழகத்தில் நகா்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான பணியை மாநிலத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 2020ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் புதன்கிழமை வெளியிட்டாா். துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, சட்ட அலுவலா் அமுல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் கூறியதாவது: மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 147 ஆண் வாக்காளா்கள், 7 லட்சத்து 40 ஆயிரத்து 813 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 203 போ் என மொத்தம் 14 லட்சத்து 85 ஆயிரத்து 163 வாக்காளா்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு 1,216 வாக்குச் சாவடிகள் இருந்தன. நடப்பு ஆண்டில் 29 வாக்குச் சாவடிகள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டு, 1,245 வாக்குச் சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. 1,400 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற அடிப்படையில் வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு வாக்குச் சாவடி பட்டியலானது, அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலங்களிலும் மக்களின் பாா்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதைப் பாா்த்து தங்களின் வாக்குச் சாவடி விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT