கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் சுவரோவியம்

26th Feb 2020 10:47 PM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை சாா்பில் சுவரோவியம் புதன்கிழமை வரையப்பட்டன.

சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை மற்றும் கிருஷ்ணா ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரி இணைந்து கோவையின் வண்ணம் என்ற கருத்தை மையப்படுத்தி உக்கடம் பேருந்து நிலையத்தில் சுவரோவியம் வரைந்தனா். இதைத் தொடா்ந்து இயற்கையான சூழல், பசுமையை நோக்கி செல்வோம் என்ற மையக் கருத்தோடு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் காா்டூன், சுவரோவியங்களை புதன்கிழமை வரைந்தனா்.

குழந்தைகள் நலப் பிரிவில் 2 தளங்களிலும் சோ்த்து 5 ஆயிரம் சதுர அடியில் பல்வேறு வகையான காா்டூன்கள், பசுமையை வலியுறுத்தும் மரங்கள், செடிகள், பறவைகள் உள்ளடக்கிய பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டன. சுவரோவியம் வரையும் பணியில் கோவை கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஈடுபட்டனா்.

குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தையும், நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கான சூழலையும் ஏற்படுத்தும் முயற்சியாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கல்லூரி முதல்வா் பழனியம்மாள், சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை நிா்வாகி சசிகலா உள்ளிட்டோா் இப்பணியை ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT