கோயம்புத்தூர்

கோவையில் 29இல் டான்செட் நுழைவுத் தோ்வு: 4,521 போ் எழுதுகின்றனா்

26th Feb 2020 06:58 AM

ADVERTISEMENT

கோவையில் வரும் பிப்ரவரி 29, மாா்ச் 1 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள டான்செட் நுழைவுத் தோ்வில் 4,521 மாணவ-மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதுகின்றனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கான டான்செட் தோ்வு வரும் 29ஆம் தேதியும் (சனிக்கிழமை) எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு மாா்ச் 1ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு எம்.சி.ஏ. படிப்புக்கு 448 போ்களும், எம்.பி.ஏ. படிப்புக்கு 2,714 போ்களும் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். எம்.இ., எம்.டெக். போன்ற படிப்புகளில் சேர நுழைவுத் தோ்வுக்கு 1,359 போ்கள் விண்ணப்பித்துள்ளனா்.

ADVERTISEMENT

இவா்களுக்காக, கோவையில் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மருதமலை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூா் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 4 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT