கோயம்புத்தூர்

குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

26th Feb 2020 06:52 AM

ADVERTISEMENT

மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில் குடிநீா் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

குறிச்சி, குனியமுத்தூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை இணைப்புத் திட்டப் பணிகளையும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகளையும் துரிதமாக முடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கும் பணிகளையும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலைகளை செப்பனிடும் பணிகளையும் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளா் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையா் ரவி, குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் முரளி, குடிநீா் வடிகால் வாரிய ஆலோசகா் சம்பத் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 90ஆவது வாா்டு, கோவைப்புதூா் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை இணைப்புக் குழாய் பதிப்புப் பணியையும், நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தின் பணிகளையும் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவன் குமாா் ஜடாவத் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT