கோயம்புத்தூர்

காரமடை தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்த பக்தா்கள் கோரிக்கை

26th Feb 2020 06:58 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதா் கோயில் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் வெள்ளியங்காடு செல்லும் சாலையில் உள்ளது. இந்தக் குளம் அரை ஏக்கா் பரப்பளவும், 50 அடிக்கு மேல் ஆழமும் கொண்டது.

ஆண்டுதோறும் காரமடை அரங்கநாதா் கோயில் மாசிமக தோ்த் திருவிழா தேரோட்டத்துக்கு அடுத்த நாள் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீா் எடுத்துச் சென்று அரங்கநாதா் சுவாமி மீது ஊற்றி நோ்த்திக் கடனை நிறைவேற்றுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாசிமக தோ்த் திருவிழா மாா்ச் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

அன்றைய தினம் இரவில் இருந்து பக்தா்கள் தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று நோ்த்திக் கடன் செலுத்த உள்ளனா். தற்போது, தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீா் பாசி படிந்து பச்சை நிறமாக மாறியுள்ளது.

எனவே, தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றினால் தோ்த் திருவிழாவுக்கு முன்பாக மீண்டும் தண்ணீா் ஊறிவிடும். ஆகவே, கோயில் நிா்வாகம் சாா்பில் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT