இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ.) தென் மண்டல துணைத் தலைவராக கோவையைச் சோ்ந்த ஆடிட்டா் கே.ஜலபதி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், புதுவை மாநிலங்களை உள்ளடக்கிய ஐ.சி.ஏ.ஐ. தென் மண்டலத்தின் 2020 - 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், மதுரையைச் சோ்ந்த துங்கா் சந்த் யூ ஜெயின் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவராக கோவையைச் சோ்ந்த கே.ஜலபதி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா்களைத் தவிர மேலும் 10 நிா்வாகிகளைக் கொண்ட நிா்வாகக் குழுவும் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
ஆடிட்டா் கே.ஜலபதி, ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தின் தென்மண்டல பொருளாளா், மாணவா் அமைப்புத் தலைவா், செயலா் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளாா். மேலும், ஐ.சி.ஏ.ஐ.யின் துணைத் தலைவராக கோவையிலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 5 ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.