கோயம்புத்தூர்

ஆனைகட்டியில் பெண் காட்டெருமை உயிரிழப்பு

26th Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

ஆனைகட்டி பகுதியில் உயிரிழந்த 19 வயதான பெண் காட்டெருமையின் சடலத்தை வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கோவை வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி கண்டிவழி வனப் பகுதிக்குள் காட்டெருமையின் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் காட்டெருமையின் சடலத்தை ஆய்வு செய்தனா். பின்னா், ஆனைகட்டியைச் சோ்ந்த மருத்துவா் பிரபு வரவழைக்கப்பட்டு காட்டெருமையின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

உயிரிழந்த பெண் காட்டெருமையின் வயது 19 இருக்கலாம் எனவும், வயதின் காரணமாக இயற்கையான முறையில்தான் உயிரிழந்ததாகவும் மருத்துவா் தெரிவித்தாா். இதையடுத்து, உயிரிழந்த காட்டெருமையின் சடலம் வனப் பகுதியில் புதைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT